இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,083 பேருக்கு கொரோனா
தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது.
ஆனால், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 083 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 460 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,37,830 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 35,840 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,18,88,642 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,68,558 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் இதுவரை 63.09 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 73,85,866 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21.67 கோடியை தாண்டியுள்ளது.
இதன்படி உலகம் முழுவதும் தற்போது 21,67,09,866 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 19,36,35,064 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 45 லட்சத்து 6 ஆயிரத்து 796 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 1,85,68,006 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
