வந்தவாசியின் புதிய டிஎஸ்பி பதவி ஏற்றார் முதல் நிகழ்வாக மரக்கன்றுகளை நட்டார்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய டிஎஸ்பியாக பொறுப்பேற்ற வெ. விக்னேஸ்வரய்யா
எக்ஸ்னோரா வந்தவாசி கிளையின் சார்பாக வந்தவாசி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வில் கலந்து கொண்டு,மரக்கன்றுகளை நட்டார்  சமூக செயல்பாடுகளுடன் என்றென்றும் இணைந்து செயலாற்றுவேன்  என பேசினார்.

உடன் பி. தங்கராமன் டி.எஸ்.பி பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) மு. சங்கர், எக்ஸ்னோரா வந்தவாசி கிளை தலைவர் ம. சுரேஷ் பாபு, செயலாளர் கு. சதானந்தன், துணைத் தலைவர் பா. சீனிவாசன், பொறுப்பாளர்கள் சீ. கேசவராஜ், மு. பிரபாகரன், சுந்தர் தாஸ், பூபாலன், பாதிரி ஊராட்சி மன்றத் தலைவர் வெ.அரிகிருஷ்ணன், மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் முத்தமிழன், ரகு பாரதி, சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.