திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகருக்கு  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் துணை தலைவரும், ராமநாதபுரம்  நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி வருகை புரிந்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஹாஜி டி. எம். பீர் முகமது  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் கே.ஏ. டபிள்யு  அப்துல் காதர் ஷரிப் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.

பெரிய பள்ளிவாசல் ஜமாத் சார்பாக    பட்டேல் கே. எம். மீரா  மற்றும் வந்தவாசி நகர திமுக சார்பில் நகர பொறுப்பாளர் எச். ஜலால், நகர அவைத்தலைவர் நவாப் , ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து  சால்வை அணிவித்தனர்.

உடன் பெரிய பள்ளிவாசல் பொருளாளர் கே. அப்துல் மஜீத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செய்யார் நகர தலைவர் எஸ். பி. ஹனிப்  பாஷா, மாவட்ட செயலாளர்  செய்யது உசேன், மாவட்ட துணை செயலாளர் சவுக்கத் அலி, நகர துணைத் தலைவர் அபிபுல்லா , மாவட்ட துணை செயலாளர் அப்துல் வாகித், மாவட்ட துணைத்தலைவர் அப்துல்லா ஜே. மன்சூர் அலி மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.