மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள போலீசாருக்கு பயிற்சி – டி.ஜி.பி சைலேந்திர பாபு

போலீசாருக்கு மனிதாபிமானத்துடன்நடந்துகொள்ள பயிற்சி அளிக்கப்படும் என சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பதவிக் ஏற்றுக்கொண்ட சைலேந்திர பாபு கூறி உள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. இதையடுத்து தமிழக காவல்துறையின் 30-வது சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக சைலேந்திர பாபு இன்று பதவியேற்று கொண்டார்.
சென்னை மெரினாவில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் அவர் பதவியேற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-

காவல்துறையின் தலைமை பொறுப்பை வகிப்பது என்பது அரிய வாய்ப்பு. இந்த அரிய வாய்ப்பை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.

தமிழகத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கை பேணி காக்க முன்னுரிமை வழங்கப்படும்.

மக்களிடம் போலீசார் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அந்த வகையில், போலீசாருக்கு பயிற்சிகள் வழங்கப்படும் என்று சைலேந்திரபாபு கூறினார்.