ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு இலவச ஓவியப் பயிற்சி புத்தகங்கள், வண்ண பென்சில்கள், முகக் கவசங்கள்:  ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஊராட்சி ஒன்றிய(கிழக்கு) தொடக்கப் பள்ளியில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில்  முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு
இலவச ஓவியப் பயிற்சி கையேடு, வண்ண பென்சில்கள், முகக் கவசங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆ. சித்ரா, உதவி ஆசிரியை கண்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் பங்கேற்று, இலவச ஓவியப் பயிற்சி கையேடுகளை வழங்கி  பேசியதாவது:

கொரோனா சூழலில்  குழந்தைகளை  பெற்றோர்கள் வீட்டில் பாதுகாப்பான முறையில் பராமரிக்க வேண்டும் என்றும், பயனுள்ள கல்வி சார்ந்த தகவல்களை குழந்தைகளிடம் பெற்றோர்கள் விளக்க வேண்டும் எனவும் பேசினார்.

மேலும் பள்ளியில் விலையில்லா பாடநூல் புத்தகங்களை வாங்க வரும் மாணவர்களுக்கு  சூடான வெஜிடபிள் பிரியாணி பாக்கெட் தலைமை ஆசிரியரால் வழங்கப்பட்டது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.