ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அமல்!
ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அமல்!
காரைக்கால் மாவட்டத்தில் ஜூன் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது
.
தற்போது புதிய தளர்வாக தனியார் அலுவலகங்களில் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
புதுவை பகுதியில் கொரோனா நோய்த்தொற்றின் வீரியம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 20 ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து தனது தாக்கத்தை செலுத்தி வருவதால் புதுவை அரசு பல கட்டங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து வருகிறது
இந்நிலையில் கடந்த சில தினங்களாக புதுவை பகுதியில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக காரைக்கால் மாவட்டத்தில் குறைந்த அளவிலான பாதிப்புகள் இருந்து வருகிறது.
அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் காரைக்கால் மாவட்டத்தில் 39 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற ஜூன் 30ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது காரைக்காலில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
புதிய தளர்வுகள்:
மதுக்கடைகள், வணிக நிறுவனங்கள் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி.
கடற்கரை, பூங்காக்களில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் செல்ல அனுமதி.
பேருந்து, கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி.
தனியார் அலுவலகங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி.
உணவகங்களில் இரவு 9 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களை கொண்டு செயல்பட அனுமதி.
வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் பொது தரிசனத்திற்கு மாலை 5 மணி வரை அனுமதி.
