இந்தியாவில் நேற்று புதிதாக 54 ஆயிரத்து 69 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார த்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54 ஆயிரத்து 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,00,82,778 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 68 ஆயிரத்து 885 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன்மூலம் இதுவரையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 90 லட்சத்து 63 ஆயிரத்து 740ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று 1,321 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, உயிரிழப்பு 3 லட்சத்து 91 ஆயிரத்து 981ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 6 லட்சத்து 27 ஆயிரத்து 57 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 30,16,26,028 பேருக்கு கொரோனா தடு்ப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
