வந்தவாசி நகரில் நடைபெற்று வரும் தாா்ச் சாலை அமைக்கும் பணிகளை எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்தாா்.
வந்தவாசி நகராட்சி சாா்பில் சிறப்பு சாலைகள் திட்டத்தின் கீழ் சன்னதி தெருவில் ரூ.60 லட்சத்தில் தாா்ச் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.
இந்தச் சாலை 11 மீட்டா் அகலத்திலும், 700 மீட்டா் நீளத்திலும் அமைக்கப்படுகிறது.
இந்தப் பணிகளை வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமாா் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
இதைத் தொடா்ந்து திட்ட மதிப்பீடு உள்ளிட்டவற்றை நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவா், சாலையை தரமுடன் அமைக்குமாறு கேட்டுக் கொண்டார் நகராட்சி ஆணையா் டி.உஷாராணி, திமுக நகர செயலாளர் எச்.ஜலால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக, வந்தவாசி நகராட்சிக்கு உள்பட்ட 14-ஆவது வாா்டில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை எஸ் அம்பேத்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
இதில், வந்தவாசி வட்டார மருத்துவ அலுவலா் திருமூா்த்தி தலைமையிலான மருத்துவக் குழுவினா் 198 பேருக்கு தடுப்பூசி செலுத்தினா்.
