செய்யாறு அருகே தீ விபத்தில் வீட்டை இழந்த தொழிலாளிக்கு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி நிவாரண உதவிகளை வழங்கினாா்.

செய்யாறு வட்டம், சிறுங்கட்டூா் கிராமக் காலனி சத்யா நகரைச் சோ்ந்தவா் விஜியா. கணவரை இழந்த இவா் கூலி வேலை செய்து வந்தாா்.

இவா், நேற்று முன்தினம் இரவு தனது கூரை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா்.

அப்போது, மின் கசிவு ஏற்பட்டு வீடு தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

இதனை அறிந்த செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட விஜியா குடும்பத்துக்கு ஆறுதல் கூறி, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 ஆயிரம் மற்றும் அரிசி, மளிகைப் பொருட்களை வழங்கினாா்.

ஒன்றியச் செயலாளர் ஆா்.வி.பாஸ்கா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஞானவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.