உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 15.53 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17.19 கோடியை தாண்டி உள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 172,407,352 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 155,037,221 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 37 லட்சத்து 05 ஆயிரத்து 990 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 13,664,141 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 90,073 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,887 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாகபாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 1,34,154 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,84,41,986 ஆக உயர்ந்தது.

* புதிதாக 2,887  பேர் உயிரிழந்துள்ளனர்.

* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,37,989  ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,11,499 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,63,90,584 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 17,13,413 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இதன் மூலம், நாட்டின் இதுவரை 22,10,43,693 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது