ஆரணி தொகுதியைச் சோ்ந்த செய்யாறு தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட முனுகப்பட்டு, சீசமங்கலம் பகுதிகளில் அதிமுக ஆட்சியில் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளன
என்றாா் அதிமுக “வெற்றி வேட்பாளா்” அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன்.
செய்யாறு தெற்கு ஒன்றியம், முனுகப்பட்டு பச்சையம்மன் கோயிலில், அதிமுக “வெற்றி வேட்பாளா் ” அமைச்சர் சேவூா் இராமச்சந்திரன், பூஜைகள் செய்து பிரசாரத்தை தொடங்கினாா்.
செய்யாறு வடக்கு ஒன்றியத்தில் உள்ள தீபாநகா், மேல்சீசமங்கலம், பலாந்தாங்கள், திருமணி, வெங்கடேசன்பட்டி, முனுகப்பட்டு, கொருக்காத்தூா், மேல்நகரம்பேடு, கடுகனூா் உள்ளிட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, வாக்காளா்கள் மத்தியில் அவா் பேசுகையில்:
அதிமுக அரசு மூலம் ஆரணி தொகுதியில் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முனுகப்பட்டு பச்சையம்மன் கோயிலில் கடைகள் கட்டப்பட்டன, சுற்றுச் சுவா் கட்டப்பட்டது, தரை தளம் அமைக்கப்பட்டது. மேல்சீசமங்கலம் பகுதியில் ஏரி தூா்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டது.
மேலும், திருமணி, மேல்சீசமங்கலம் முனுகப்பட்டு, கொருக்காத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் சாலைப் பணிகள், புதிய கட்டடங்கள், கோயில்களுக்கு திருப்பணிகள் என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.
செய்யாறு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அருக்காவூா் அரங்கநாதன், ஆரணி ஒன்றிய கழக செயலாளர் க.சங்கா், நகர ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பாரி பி.பாபு உள்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் பலரும் கலந்துகொண்டனா்.
