திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தொகுதி அதிமுக வேட்பாளர் தூசி கே மோகன் எம் எல் ஏ வை ஆதரித்து நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார்
செய்யார் பஸ்நிலையத்தில் திறந்த வேனில் நின்றபடி வேட்பாளர் தூசி கே மோகன் எம்எல்ஏ வுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்
அப்போது அவர் பேசியதாவது:
செய்யார் சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது நமது “வெற்றி வேட்பாளர் ” தூசி கே மோகன் பண்பாளர் தொகுதி வளர்ச்சிக்கு மீண்டும் வாய்ப்பை தாருங்கள் இருகரம் கூப்பி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
புரட்சித் தலைவி அம்மாவின் ஆட்சி தொடர்ந்திட உங்களின் வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு அளித்திட வேண்டும்
அதிமுக ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை என ஸ்டாலின் பச்சைப் பொய் சொல்கிறார்
செய்யார் தொகுதி விவசாயம் நெசவு மற்றும் தொழிற்சாலைகள் உள்ள பகுதியாகும் விவசாயம் விவசாய தொழிலாளர் வாழ்வாதாரம் செழிக்க வற்றாத நீர் கிடைத்திட நீர் ஆதாரம் பெருகிட குடிமராத்து பணிகள் மேற்கொண்ட அரசாங்கம் என் தலைமையிலான புரட்சித் தலைவி அம்மாவின் அரசு வீடு இல்லாத ஏழை நெசவுத் தொழிலாளர்களின் நலன் காத்திட பசுமை வீடு கட்டித் தரப்படும்
விசைத்தறி தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் 700 யூனிட் இலவச மின்சாரம் 1000 யூனிட் ஆக உயர்த்தி வழங்கப்படும் கொரோணா காலத்தில் பாதிக்கப்பட்ட நெசவாளர்களுக்கு ரூபாய் 2000 கோடி நிவாரணம் வழங்கிய அரசு என் தலைமையிலான புரட்சித் தலைவி அம்மாவின் அரசு
நெசவாளர்களுக்கு கொடுக்கப்படும் மானியம் 150 கோடியில் இருந்து ரூபாய் 300 கோடியாக உயர்த்தப்படும்
கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கும் பணியை புரட்சித் தலைவி அம்மாவின் அரசு சிறப்பாக மேற்கொண்டது பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பொங்கலுக்கு கொடுக்கும் நல திட்டத்தை தடுக்க நீதிமன்றம் சென்றவர் ஸ்டாலின்
திமுக ஆட்சியில் குடும்ப அட்டைக்கு 100 ரூபாய் கொடுத்தது உண்டா திமுக சரித்திரத்தில் கொடுத்து பழக்கமில்லை எடுத்து தான் பழக்கம் கொடுக்கும் பழக்கம் அதிமுகவுக்கு மட்டும்தான் உண்டு மக்களே வாரிசு எனது வாழ்ந்தவர் எம்ஜிஆர் ஜெயலலிதா எனவேதான் அவர்கள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
செய்யார் தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிட புரட்சித் தலைவி அம்மா சிப்காட் தொழிற்சாலையை கொண்டுவந்தார் நேர் முகமாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர்
தடையில்லா மின்சாரம் வழங்கி மின்மிகை மாநில மாக்கியதால் தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்க பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்
செய்யாறு சிப்காட் தொழிற்பேட்டை 34 புதிய கம்பெனிகள் கொண்டு வர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
ரூபாய் 350 கோடி வெம்பாக்கத்தில் மின்நிலையம் செய்யாறு தொகுதியில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பத்து இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் 12 கிராமத்தில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு வருகிற ஆண்டில் உள் ஒதுக்கீடு மூலமாக அரசுப்பள்ளியில் பயிலும் ஆறுநூறு மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் எதிர்க்கட்சியோ பொதுமக்களோ கோரிக்கை வைக்கவில்லை நான் அரசுப் பள்ளியில் படித்ததால் எனக்கு தோன்றியதால் 7.7 சதவீத உள் ஒதுக்கீடு திட்டத்தை அறிவித்து செயல் செயல்படுத்தினேன்
ஏழை மக்களுக்காக திட்டத்தை செயல்படுத்தும் புரட்சித் தலைவி அம்மாவின் அரசு வீடு இல்லாத மக்களுக்கு கிராமபுறமாக இருந்தால் தனியாக இடம் வாங்கியும் நகர்ப்புறமாக இருந்தால் அடுக்குமாடி காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீடு பழுதடைந்தால் புதுப்பித்துத் தரப்படும் அண்ணா திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது போல அனைத்து குடும்ப அட்டைக்கு ஆண்டுதோறும் ஆறு சிலிண்டர்கள் அனைத்து குடும்பத்தினருக்கும் வாஷிங் மெஷின் மாற்றுத் திறனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்
கேபிள் இணைப்பு கட்டணம் முற்றிலும் இலவசம் கூட்டுறவு சங்கத்தில் விவசாய பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது 6 பவுன் வரை நகைக்கடன் மகளிர் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும்
18 வயது நிரம்பிய வர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்
இதுபோன்று புரட்சித் தலைவி அம்மாவின் அரசு பல்வேறு திட்டங்களை இன்னும் செயல்படுத்திட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து தூசி கே மோகன் எம்எல்ஏ வை வெற்றி பெறச் செய்யுங்கள் இவ்வாறு அவர் பேசினார்


