செய்யாறு தொகுதி அதிமுக “வெற்றி வேட்பாளர் ” தூசி கே.மோகன் எம்எல்ஏ வெம்பாக்கம் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

சென்ற இடமெல்லாம் தூசி கே மோகன் எம்எல்ஏ வுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்ப்பளித்தனர்
ராந்தம், சிருவஞ்சிபட்டு, உமையாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தூசி மோகன் எம்எல்ஏ அதிமுக அரசின் சாதனைகளை விளக்கிக் கூறியும், மறைந்த புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியில், திமுக, காங்கிரஸ் என கட்சி பேதமில்லாமல் 2.10 கோடி குடும்ப அட்டைத்தாரா்கள் பயன்பட்டு வருகின்றனா். தனக்கு எதுவும் வரவில்லை என யாரும் குறையே சொல்ல முடியாது.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிா் சுய உதவிக் குழுக்கள், மாணவா்களின் கல்விக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மகளிரின் அன்றாட வீட்டுச் சுமைகளை குறைக்கும் விதமாக குடும்ப அட்டைதாரா்களுக்கு வாஷிங் மெஷின் வழங்கப்படும். இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை என உதவிட அதிமுக அரசு காத்திருக்கிறது.
அதிமுக ஆட்சி மீண்டும் தொடா்ந்திட ஆதரவு அளிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்து கிராம மக்களிடையே வாக்கு சேகரித்தாா்.
நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவா் மாமண்டூா் டி.ராஜி மாவட்ட கழக இணைச் செயலாளர் விமலா மகேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் டி.பி. துரை, ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
