வந்தவாசி நகரில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பாமக வேட்பாளர் முரளிசங்கருக்கு வாக்குகள் சேகரித்தார்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகருக்கு இன்று காலை வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி வந்தவாசி (தனி) தொகுதிக்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி பாமக வேட்பாளர் முரளிசங்கருக்கு மாம்பழ சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்தவர்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகளை எடுத்துரைத்தார் மறுபடியும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்த உள்ள திட்டங்களையும் எடுத்துக்கூறினார் இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் பாஸ்கர் ரெட்டியார் டிகேபி மணி எம்கேஏ லோகேஷ்வரன் பாலு முதலியார் ஓட்டல் பாஷா விஎஸ்எஸ் லதாகுமார் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பாமக முன்னாள் எம்பி துரை அன்னை சீனு பாஜக நிர்வாகிகள் பாஸ்கரன் ராம்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
