வந்தவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வந்தவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 698 விவசாயிகள் 6 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 739 ரூபாய் பயிர் கடன் பெற்று இருந்தனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்
இதையடுத்து வந்தவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அதிமுக கூட்டுறவு சங்க தலைவர் வெண்குன்றம் முனுசாமி கலந்து கொண்டு 698 விவசாயிகளுக்கு 6 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 739 ரூபாய் பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீதுகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க செயலாளர் சங்க இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
