வந்தவாசி அருகே அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள் விழா ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த நெல்லியாங்குளம் கிராமத்தில் அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள் விழா முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கலையரசு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார்,மாவட்ட அவைத்தலைவர் டி.கே.பி.மணி ஆகியோர்கள் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
பின்னர் 2000 பேருக்கு வேட்டி சேலை மூக்கு கண்ணாடி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜய், ஒன்றிய கழக செயலாளர்கள் அர்ஜுனன், எம்கேஏ லோகேஸ்வரன், டிவி பச்சையப்பன்,வந்தவாசி நகர கழக செயலாளர் ஓட்டல் பாஷா, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வழூர் சக்கரபாணி,வந்தவாசி நகர அம்மா பேரவை செயலாளர் மேகநாதன், ஒன்றிய துணை செயலாளர் பந்தல் சேகர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
