தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 63 லட்சத்து 41 ஆயிரத்து 762 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நேற்றைய (வெள்ளிக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று 291 ஆண்கள், 192 பெண்கள் என மொத்தம் 483 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 142 பேரும், செங்கல்பட்டு, கோவையில் தலா 45 பேரும், திருவள்ளூரில் 21 பேரும், குறைந்தபட்சமாக பெரம்பலூரில் இருவரும், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகரில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர், தர்மபுரி, அரியலூரில் புதிதாக பாதிப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 44 ஆயிரத்து 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் 5 லட்சத்து 10 ஆயிரத்து 162 ஆண்களும், 3 லட்சத்து 33 ஆயிரத்து 976 பெண்களும், 3-ம் பாலினத்தவர்கள் 35 பேரும் அடங்குவர். இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 30 ஆயிரத்து 631 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 486 பேர் புதிதாக நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 137 பேரும், கோவையில் 46 பேரும், செங்கல்பட்டில் 34 பேரும் அடங்குவர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 27 ஆயிரத்து 480 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில் 4 ஆயிரத்து 285 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
கொரோனாவுக்கு அரசு, தனியார் மருத்துவமனையில் தலா 3 பேர் என மொத்தம் 6 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
இதுவரையில் தமிழகத்தில் 12,408 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 63 லட்சத்து 41 ஆயிரத்து 762 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

நேற்று ஒரே நாளில் 55 ஆயிரத்து 128 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது