திருப்பரங்குன்றம் தெய்வானையை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்ட இந்த தலத்தில் வந்து இறைவனை வணங்கி வழிபட்டு சென்றால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் வாய்ப்பு கிட்டும்.

சித்தர்கள் ஞானிகளின் குருவான முருகனுக்கு ஆறுபடை வீடு நம் முன்னோர்கள் அமைத்ததன் ரகசியம் என்ன தெரியுமா? மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம், அபயம் (பாதுகாப்பு) ஆளுமை, ஞானம் ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும் என சித்தர்கள் சொல்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் சக்தியுள்ள இடங்களில் ஆறுமுகன் ஆலயங்கள் அறுபடை வீடாக எழுப்பப்பட்டன. ஆரோக்கியத்திற்கு சுவாமிமலை, உறவுக்கு திருப்பரங்குன்றம், பொருளாதார வசதிக்கு சோலைமலை, பாதுகாப்புக்கு திருச்செந்தூர், ஆளுமை திறனுக்கு திருத்தணி, ஞானம் பெற பழநி ஆகிய தலங்களை தரிசிக்கலாம். அறுபடை வீடு என்றால் என்ன? வெறுமனே ஆறுவீடுகள் என்று சொல்லாமல் இடையில் ஏன் படை என்ற சொல் வந்தது?

இதைப் புரிந்து கொள்ள நாம் நக்கீரரைத்தான் துணைக்கு அழைக்க வேண்டும். அவர்தானே தமிழில் முதன்முதலாக முருகக்கடவுளைப் போற்றி நூல் எழுதியவர்.

புலவர்கள் பொதுவாக அரசர்களிடம் சென்று பாடிப் பரிசு பெறுவார்கள். அப்படி நல்லபடி பரிசளித்த மன்னர்களைப் பற்றி தம்மைப் போன்ற புலவர்களிடம் சொல்லி அவர்களையும் அங்கு அனுப்புவார்கள். இப்படிச் செய்வதற்கு ஆற்றுப்படுத்துதல் என்று தமிழில் பெயர். ஒவ்வொரு புலவரிடமாகச் சென்று விவரத்தைச் சொல்ல முடியாது என்று பொருள் தந்து வாழ்வித்த மன்னரைப் பற்றி நூலாகவே எழுதிவிடுவார்கள்.

அப்படி எழுதப்பட்ட நூல்களுக்கு ஆற்றுப்படை நூல்கள் என்று பெயர்.

பொருள் கொடுத்த மன்னனைப் பற்றி ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் அருளைக் கொடுத்த கடவுளை நோக்கி மக்களை ஆற்றுப்படுத்துவதற்காக நக்கீரர் எழுதியதுதான் திருமுருகாற்றுப்படை

செந்தமிழ்க் கடவுளாம் செந்திலங்கடவுளின் செம்மையான பண்புகளைப் பாராட்டி அவனிடம் அருள் பெறலாம் என்று எழுதிய நூல்தான் திருமுருகாற்றுப்படை தமிழில் எழுந்த முதல் பக்தி நூல் என்ற பெருமையும் இந்த நூலுக்கே உண்டு. சங்கநூல்களில் தொகுக்கப்பட்டு பின்னாளில் சைவத் திருமுறைகளிலும் தொகுக்கப்பட்ட ஒரே நூலும் திருமுருகாற்றுப்படைதான். ஆற்றுப் படுத்தும் போது அந்த மன்னன் வாழும் ஊரைச் சொல்லி அங்கு செல்க என்று சொல்வார்கள். ஆனால் இவரோ முருகனை நோக்கி ஆற்றுப்படுத்துகிறார்.

அப்படி ஆற்றுப்படுத்தும் போது முருகப் பெருமான் குடிகொண்ட ஆறு ஊர்களுக்குச் செல்லுமாறு ஆற்றுப்படுத்துகிறார்.

அப்படி நக்கீரர் குறிப்பிட்ட படைவீடுகள்தான் ஆற்றுப்படை வீடுகள். அப்படி ஆற்றுப்படுத்தப்பட்ட வீடுகள் எண்ணிக்கையில் ஆறாக இருந்ததால் ஆற்றுப்படை என்பது நாளாவட்டத்தில் மறுவி ஆறுபடை வீடுகளாகி விட்டன. சரி. நக்கீரர் எந்த வரிசையில் ஆற்றுப்படை வீடுகளை பட்டியல் இடுகிறார்? முதற் படைவீடு திருப்பரங்குன்றம், இரண்டாம் படைவீடு திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), மூன்றாம் படைவீடு திருவாவினன்குடி (பழனி), நான்காம் படைவீடு திருவேரகம் (சுவாமிமலை), ஐந்தாம் படைவீடு குன்றுதோறாடல் ( திருத்தணி ), ஆறாம் படைவீடு பழமுதிர்ச்சோலை மேலே குறிப்பிட்டிருப்பதுதான் நக்கீரர் பாடிய ஆற்றுப்படை வீடுகளின் வரிசை. கந்தன்கருணை பாடலில் ஒவ்வொரு படைவீட்டுக்கும் சொல்லப்பட்ட முருகன் வாழ்க்கை நிகழ்வுகளை நக்கீரர் ஆற்றுப்படை வீடுகளோடு தொடர்பு படுத்தவில்லை.

பின்னாளில் ஆறுபடை வீடுகளோடு முருகனின் வாழ்க்கை நிகழ்வுகளும் தொடர்புபடுத்தப்பட்டன.

காலங்கள் மாறினாலும் கருத்துகள் மாறினாலும் கந்தப் பெருமான் தமிழர்களுக்குச் சொந்தப் பெருமானாய் ஆறுபடைவீடுகளிலும் வீற்றிருந்து அன்பு மாறாமல் அருள் புரிந்து கொண்டிருக்கிறான்.

கால மாற்றத்தில் தமிழ்நாடு என்று மாநிலம் உருவான போதும் ஆறுபடை வீடுகளும் தமிழ்நாட்டுக்குள்ளேயே அமைந்ததும் தற்செயல் அல்ல முருகனின் தமிழ்த் தொடர்பே என்பதும் கருதத்தக்கது.

குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் குமரனின் ஆற்றுப்படை வீடுகளுக்கு நாமும் செல்வோம். நல்லருள் பெறுவோம்.சிறப்புகள்

இந்தத் திருவிழா மழைவேண்டுகின்ற வழிபாடாகவும் கொண்டாடப் படுகிறது.

முருகப் பெருமானின் வேல், காலை 9 மணியளவில் கோயிலிலிருந்து பல்லக்கு ஏறிப் புறப்படும். மலைமீது காசிவிஸ்வநாதருக்கு எதிரேயுள்ள ‘மலைமேல் குமார’ரிடம் வேல் சேர்ப்பிக்கப்படும்.

முன்னொரு காலத்தில் திருப்பரங்குன்றத்துப் பகுதியில் பூதம் ஒன்று வாழ்ந்துவந்தது. தன் சாபம் தீரவேண்டி பூதம், சிவவழிபாட்டு நிந்தையிலிருந்து தவறியவர்களைச் சிறைப்பிடித்து வந்தது. ஆயிரம் பேரைச் சிறைகொண்டதும் அவர்கள் அனைவரையும் விழுங்கிவிடத் திட்டம் தீட்டியிருந்தது, அந்தப்பூதம். மொத்தம் 999 பேர் சிறைவாசிகளாயினர். ஆயிரமாவது ஆளுக்காகக் காத்துக்கொண்டிருந்தது பூதம். சிவனார் வாக்கினை எதிர்த்து வாதம்செய்த பாவத்தைப் போக்கிட நக்கீரர் பெருமான், குன்றத்தில் தவம் செய்தார். அப்போது, குளத்தில் ஓர் இலையைக்கண்டு வியந்து தவத்திலிருந்து விலகினார்.

இதனால் கோபம் கொண்ட அந்த பூதம் நக்கீரானாரைப் பிடித்துக் குகையிலடைத்தது. நக்கீரர் அஞ்சாது தன்னையும் சிறைப்பட்ட அனைவரையும் விடுவிக்க முருகனை நினைத்துத் திருமுருகாற்றுப்படை பாடினார்,

முருகன் மகிழ்ந்து காட்சிகொடுத்து, பூதத்தையும் சம்ஹாரம் செய்தார். 1000 பேரையும் சிறைமீட்டார்`நக்கீரர் தன் பாவம் தீர காசிக்குச்சென்று நீராடவேண்டும்’ என எண்ணினார்.

நக்கீரரின் குறைதீர்க்க முருகக்கடவுள் தனது வேலால் பாறையைக்கீறி அங்கேயே காசித்தீர்த்தம் பொங்கச்செய்தார். அதில் நீராடிய நக்கீரர், பாவம் நீங்கினார் என்கிறது தலபுராணம். இந்த நிகழ்வினை நினைவூட்டும் வகையில் நக்கீரரைக் காக்க, முருகனின் வேல் மலைக்குச் செல்லும் வைபவம் வேலெடுத்தல் விழாவாக ஒவ்வோராண்டும் கொண்டாடப்படுகிறது.

திருப்பரங்குன்றம் இந்த விழாவைச் சுற்றுப்புறக் கிராமத்து மக்களே எடுத்து நடத்துகின்றனர். இந்தத் திருவிழா மழைவேண்டுகின்ற வழிபாடாகவும் கொண்டாடப்படுகிறது.

முருகப் பெருமானின் வேல், காலை 9 மணியளவில் கோயிலிலிருந்து பல்லக்கு ஏறிப் புறப்படும். மலைமீது காசிவிஸ்வநாதருக்கு எதிரேயுள்ள `மலைமேல் குமார’ரிடம் வேல் சேர்ப்பிக்கப்படும். பூஜைகளானதும், கிராம மக்கள் சார்பில் அன்னதானம் நடைபெறும்.

மாலையில் மலையிருந்து பல்லக்கில் புறப்படும் வேல், அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியர் சந்நிதியை வந்தடையும்.

பின்னர் இரவில், பூப்பல்லக்கில் புறப்பாடாகி மூலவர் சந்நிதிக்குக் கொண்டு செல்லப்படும். குன்றத்து முருகர், குடைவரை மூலவர். ஆதலால் மூலவருக்குப் பதில் அவர் திருக்கரத்தின் வேலுக்கு மட்டுமே அபிஷேகங்கள் நடைபெறும் என்பது ஆறு படை வீட்டில் முதலாவது படை திருப்பரங்குன்றமும் ஆறாவது படை பழமுதிர்ச் சோலையும் மதுரை மாவட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது

திருத்தல தகவல்: மக்கள்குரல்