SCHWING stetter நாடு முழுவதும் கான்கிரீட் மற்றும் கட்டுமான உபகரணங்களின் மிகப் பெரிய உற்பத்தியாளர்களில் ஒருவரான ஸ்விங் ஸ்டெட்டர் இந்தியா தனது 5 வது உற்பத்தி தொழிற்சாலையை திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் இன்று திறந்து வைக்கப்பட்டது 50,000 சதுர பரப்பளவை கொண்ட 52 ஏக்கரில் அதி நவீன வசதிகளுடன் கான்கிரீட் பூம் பம்புகள் செல்ப் லோடிங் மிக்ஸர் ஷாட் கிரிட் பம்புகள் எக்ஸ்கா வேட்டர் வீல் லோடர்ஸ் மற்றும் மோட்டார் கிரேடர்கள் ஸ்விங் ஸ்டெட்டர் 2019 ல் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு மூலம் தமிழக அரசுடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது ஏற்கனவே இந்த வசதியில் 300 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது எதிர் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்யும் கான்கிரீட் உபகரணத்துறையில் முன்னணி நிறுவனமான ஸ்விங் ஸ்டெட்டர் தற்போது நான்கு தொழிற்சாலைகளை ஸ்ரீ பெரும்புதூரில் அமைத்துள்ளது இயற்கை எழில் சூழலில் கட்டப்பட்ட இத்தொழிற்சாலை புதிய வசதியாக டெலிமாடிக்ஸ் ஐ ஓ டி மற்றும் ரோபோ இயந்திர கற்றல் ஆகியவற்றின் விரிவான பயன்பாட்டுடன் அனைத்து உபகரணங்கள் மற்றும் உற்பத்தி செயல்முறைகளின் டிஜிட்டல் மயமாக்குவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்துகிறது புதிய வசதியில் NABL சான்றளிக்கப்பட்ட தர சோதனை ஆய்வகம் மற்றும் Bonded warehouse ஆகியவை அடங்கும் கான்கிரீட் தயாரிப்புகளில் பயிற்சியளிப்பதற்கான சிறந்த மையமாக இருக்கும் ஸ்விங் ஸ்டெட்டர் இந்தியா IESC திறன் கவுன்சிலிங் ஒரு அங்கமாகும் மேலும் அதன் புதிய வசதியில் நவீன மயமாக்கப்பட்ட பயிற்சி மையத்தின் மூலம் அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள இளைஞர்களின் திறனை வளர்க்கும் இத் திறப்பு விழாவில் ஸ்விங் ஸ்டெட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் வி ஜி சக்தி குமார் பேசுகையில் மேற்கண்டவாறு கூறினார் எங்களுக்கு இன்று வரலாற்று தருணம் என குறிப்பிட்டார் முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் எம் கே விஷ்ணு பிரசாத் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே மோகன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்