வந்தவாசி அருகே ரூ 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு விழா.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் ஊராட்சியில் ரூபாய் 60 லட்சம் மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது

வந்தவாசி அடுத்த கிழ்கொடுங்காலூர் கிராமத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் ரூ 60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது அதனை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனை மக்கள் பயன்பாட்டிற்காக துணை இயக்குனர் டாக்டர் சங்கீதா துவக்கி வைத்தார்
கூட்டுறவு சங்க தலைவர் எம்.கே. ஏ. லோகேஸ்வரன் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாகுமார் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் திரு மூர்த்தி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர் .
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் லோகநாதன் சுகாதார ஆய்வாளர் லீலாவினோதன் மருந்தாளுநர் சங்கீதா கூட்டுறவு சங்க துணை தலைவர் ராஜசேகர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.