தமிழிலேயே குழந்தைகளுக்கு பெயர் சூட்டுங்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் மாணவர்களுக்கு  நடைபெற்ற உலக தாய்மொழி தினவிழா நிகழ்வில் பங்கேற்று பேசிய கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், குழந்தைகளுக்கு தாய்மொழியாம் தமிழிலேயே பெயர் சூட்டுங்கள். மற்ற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் தாய்மொழியாம் தமிழ் மொழியை நேசியுங்கள் என்று பேசினார்.

இந் நிகழ்வில் பட்டதாரி ஆசிரியர் சதானந்தன் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழே வணக்கம்… என்ற தலைப்பில் பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டன.