பெருங்கட்டூர்: அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா!

திருவண்ணாமலை மாவட்டம்  செய்யாறு

அடுத்த வெம்பாக்கம் பெருங்கட்டூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஊர்ப்புற நூலகம்  இணைந்து பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது

கொரோனா விழிப்புணர்வு நூலக உறுப்பினர் சேர்க்கை தன்னம்பிக்கை பயிற்சி முப்பெரும் நிகழ்வு நடைபெற்றது

பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆ.ஆயப்பன் தலைமை தாங்கினார் பட்டதாரி ஆசிரியர் இ. கமலக்கண்ணன் அனைவரையும் வரவேற்றார்

இந் நிகழ்விற்கு ப. குப்புராஜ்,பா. செல்வி முன்னிலை வகித்தனர்

அ. சரவணன் ஊராட்சி மன்ற தலைவர் பள்ளியின் முதுகலை ஆசிரியர் சி. ஜெயமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

சிறப்பு அழைப்பாளர்களாக மருத்துவர் க. கலைவாணன்  மருத்துவ ஆலோசனையை வழங்கி பேசினார்

“நாம் அனைவரும் புரதச்சத்துள்ள உணவுகள் உண்ண வேண்டும் என்றும் நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கீரை வகைகள் தானிய வகைகள் போன்றவை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு ஆற்றல் பெறலாம்” என்று கூறினார்

கவிஞர் பா, சீனிவாசன் தன்னம்பிக்கை உரையாற்றினார்

மாணவர்கள் அனைவரும் விருப்பத்துடன் கல்விகற்று முன்னேற வேண்டும் என குறிப்பிட்டார்

கலாம் ட்ரீம் பவுண்டேஷன் நிர்வாகி சீ. கேசவராஜ் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான கேள்வி கேட்டு மாணவர்களுக்கு விளக்க உரையாற்றினார்

அரிமா சங்க மாவட்டத் தலைவர் வடிவேல் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்

இந்நிகழ்வில் பெருங்கட்டூர் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் கோ. லோகநாதன் ரூபாய் ஆயிரம் செலுத்தி பெருங்கட்டூர் நூலக புரவலராக இணைந்தார் மாணவர்கள் 60 பேர் உறுப்பினர்களாக இணைந்தனர்

பட்டதாரி ஆசிரியர்கோ. சுரேஷ் ஒருங்கிணைத்தார்
இந் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர்
ஜா. தமீம் ,இளங்கவி ரா. குரு செய்திருந்தனர்