17ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
திருவண்ணாமலை மாவட்டம்,

வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் 17 ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் சுனாமியால் உயிரிழந்த அனைத்து உயிர்களுக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் பங்கேற்ற வந்தவாசி துணை பிடிஓ வெற்றிவேல் பேசியதாவது:
இயற்கை சீற்றங்களை தடுக்க முடியாது. ஆனால் இயற்கை வளங்களை நன்கு பேணி பாதுகாத்தால் இயற்கை சீற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மரங்களை நட்டு வைத்து இயற்கை வளங்களை காப்போம் என்று வலியுறுத்தி பேசினார்.
நிகழ்வில் கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், ரயில்வே துறை காட் தனசேகரன், ஜோதிட நிபுணர்கள் சங்கரநாராயணன், சதானந்தன், முதுகலை ஆசிரியர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
