வந்தவாசி நகரில் சித்த மருத்துவ முகாம்!

வந்தவாசி:

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தாழம்பள்ளம் சர்வ சக்தி முனீஸ்வரர் ஆலய வளாகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிற்றுக்கிழமைகளில் எஸ் வி சித்தா கிளினிக் சர்வ சக்தி முனீஸ்வரர் அறக்கட்டளை இணைந்து, இதன் தலைவரும் வழக்கறிஞருமான துரை வீராசாமி தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது

இந்த சித்த மருத்துவ முகாமில் உயர்தரமான மருந்துகள் வழங்கப்படுவது சிறப்பம்சம் இது சம்பந்தமாக வழக்கறிஞர் துரை வீராசாமி கூறுகையில்:

” ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது

திறமையான மருத்துவர் அரிகரன் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மருத்துவக் குழுவினர் சேவை புரிகின்றனர் எனவே இந்நல்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கின்றேன் ” இவ்வாறு கூறினார்