திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் ஊர்ப்புற நூலகத்தில் முப்படை வீரர்களின் தியாகங்களை போற்றும் கொடி நாள்
மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது
ஊராட்சி மன்ற தலைவர் அ. சரவணன் தலைமை வகித்தார் கொடி நாள் குறித்து முன்னாள் ராணுவ வீரர் கே ஜி சுப்பிரமணியம் ராணுவ வீரர்களின் தியாகங்கள் பற்றி பேசினார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி பெருங்கட்டூர் தலைமையாசிரியர் பொன் ரவி கொடி நாள் குறித்து பேசினார்
சிறப்பு அழைப்பாளர்களாக வெம்பாக்கம் ஒன்றியக்குழு உறுப்பினர் சத்யா பக்தன் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்
நிகழ்ச்சியில் புரவலராக ரூபாய் ஆயிரம் செலுத்தி வி. ஜி மேகநாதன் கலைவாணி புரவலர்களாக இணைந்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர் ஜா. தமீம் மற்றும் நூலக உறுப்பினர் பா.
பிரகாஷ் மற்றும் வாசகர்கள் பள்ளி மாணவர்கள் செய்தனர்
