அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் ஓபிஎஸ் இபிஎஸ் போட்டியின்றி தேர்வு!

இன்று 06.12.2021 சென்னையில் உள்ள அதிமுக எம்ஜிஆர் மாளிகையில்
நடைபெற்ற கழக உட்கட்சி தேர்தலில்  முன்னாள் முதல்வர் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமி
கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், சேவூர் எஸ் இராமச்சந்திரன் உள்ளிட்ட  சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு பூச்செண்டு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.