செய்யாறு: ஓபிஎஸ்  இபிஎஸ் ஸை தரக் குறைவாக பேசிய டிடிவி தினகரனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர அதிமுக சார்பில் ஓபிஎஸ் இபிஎஸ் ஸை தரக் குறைவாக பேசிய டிடிவி தினகரனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்யாறு நகர பஸ் நிலையம் எதிரே நடைபெற்றது
மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே மோகன் அறிவுறுத்தலின் பேரில் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எம் மகேந்திரன் தலைமையில்,வே குணசீலன் மு எம்எல்ஏ மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர் கன்னியப்பன் நகர கழக செயலாளர் ஜனார்த்தனம் நகர அம்மா பேரவை செயலாளர் வெங்கடேஷன் உக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் துளசிராமன் அனக்காவூர் ஏ வி சேகர் மு ஊராட்சி மன்றத் தலைவர் பொன் அண்ணாதுரை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்