ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில்  குழந்தைகள் தினவிழா!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையம் மற்றும் ஸ்ரீ பாரதமாதா மெட்ரிக் பள்ளி இணைந்து குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு குழந்தைகளுக்கான பல்திறன் போட்டிகளை பள்ளி வளாகத்தில்  நிகழ்த்தியது.

இவ்விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை வகித்தார்.

திரைப்பட கலை இயக்குனர் விஜய் ஆதிராஜன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் மலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியர் அ. சதீஷ் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக, தெள்ளார் ராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியின் இயக்குநர் எஸ். அப்பாண்டைராஜன்  அவர்கள் பங்கேற்று, குழந்தைகள் எவ்வாறு தங்களை தாங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், மாணவர்களாகிய நீங்கள் எதிர்கால வாழ்க்கை முறையை எவ்வாறு பின்பற்றி நடக்க வேண்டும் என்பது பற்றியும், ஒழுக்கமுடன் கூடிய வகையில் கல்வி கற்க வேண்டும் எனவும் சிறப்புரை நிகழ்த்தினார்.

மேலும் மாணவ…மாணவிகளின் பேச்சு, பாடல்,  கவிதை, திருக்குறள் ஒப்பித்தல், ஓவியம்,  போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று,  பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் இந்த நிகழ்வில் பள்ளியின் ஆசிரியைகள் எம். தனலட்சுமி, மாலதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினர்.

பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள்  நடப்பட்டன. நிகழ்வின் இறுதியாக, ஆசிரியை அன்பரசி நன்றி கூறினார்.