சென்னை நகருக்கு வெள்ள அபாயம்

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் தற்போது செம்பரம்பக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.

ஏற்கனவே, கடந்த 2015 ல் செம்பரம்பக்கம் ஏரியில் திறந்துவிட்ட உடன் தான் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது. அதேபோன்ற நிகழ்வு மீண்டும் நடந்துவிடுமோ எனச் சென்னைவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.

இந்தச் சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போர் கால அடிப்படையில் வட சென்னை பகுதிகளில் வெள்ள நீர் பாதிப்புகள் குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் இன்று காலை ஆய்வு செய்தார்.

காலை 10.30 மணியளவில் முதலில் எழும்பூரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அதன் பிறகு வடசென்னையில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்தார்.

அப்போது மீட்புப் பணிகள் குறித்தும், வெள்ள நீரை வெளியேற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அளித்தார்.

சிவப்பு ஜீப் ஒன்றில் ரெயின்கோட் அணிந்தபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் கே.என் நேரு, சேகர்பாபு சென்னை மாநகராட்சி ஆணையர், தலைமைச் செயலாளர் உடன் இருந்தனர்.

தீபாவளிக்கு ஊருக்குச் சென்றவர்கள் 2 அல்லது 3 நாட்கள் கழித்து சென்னை திரும்புமாறு கேட்டுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என உறுதி அளித்தார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்ட மன்ற உறுப்பினர்  உதயநிதி ஸ்டாலின் அவரது தொகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நீர் பாதிப்புகளை பார்வையிட்டார்.

மழைநீர் சூழ்ந்து வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கும் மக்களுக்கு வீடுவீடாக சென்று மதிய உணவுகளையும் வழங்கினார். மேலும், வெள்ள பாதிப்புகளில் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில்,  தொகுதியில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை கால்வாயில் வடியவைக்கும் பணிகளை ஆய்வு செய்தோம். நீர் மெதுவாக வடிவதால் எந்திரங்கள் மூலம் நீரை உறிஞ்சி நீர்நிலைகளில் விடும் பணியைக் கழகத்தினர்-மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து மேற்கொண்டோம்.’ என பதிவிட்டுள்ளார்.

வெள்ள பாதிப்புகளைத் தந்தை போலவே ரெயின்கோட் அணிந்தபடி களத்தில் இறங்கி ஆய்வு செய்தார்

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.

ஏற்கனவே, கடந்த 2015 இல் செம்பரம்பாக்கம் ஏரியில் திறந்துவிட்ட உடன் தான் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது.

அதேபோன்ற நிகழ்வு மீண்டும் நடந்துவிடுமோ எனச் சென்னைவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.

இந்தச் சூழலில் முதல்வர் உட்பட  அமைச்சர்களும் அதிகாரிகளும் களத்தில் இறங்கியுள்ளது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பலரும் கூறுகின்றனர்