அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 50-வது ஆண்டு பொன்விழா வந்தவாசி நகரில் கோலாகலம்!
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட
அதிமுக சார்பில் வந்தவாசி நகரில்
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 50 வது ஆண்டு பொன்விழா காண்பதையொட்டி எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே மோகன் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ் இராமச்சந்திரன் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு தேரடியில் அதிமுக கொடிகளை ஏற்றி, பொதுமக்களுக்கு பிரியாணி பொட்டலங்களை வழங்கினர்
மாவட்ட அவைத்தலைவர் டிகேபி மணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் தெள்ளார் ஒன்றிய கழக செயலாளர் டிவி பச்சையப்பன் முன்னிலை வகித்தனர்
வந்தவாசி ஒன்றிய கழக செயலாளர் எம்கேஏ லோகேஷ்வரன் வந்தவாசி நகர கழக செயலாளர் ஓட்டல் பாஷா ராஜசேகர் விஜய் ராஜேஷ் கண்ணா பாலு முதலியார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்துக் கொண்டனர்
