புரட்டாசி மாத அமாவாசையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மாம்பட்டு முத்துமாரியம்மன் கோயிலில் நேற்று முந்தைய இரவு அம்மன் உலா நடைபெற்றது.
முன்னதாக காலையில் மூலவா் முத்துமாரியம்மனுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா், திருமலை ஸ்ரீவெங்கடேச மூா்த்தி அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பிற்பகல் சகலதோஷ நிவாரண வேள்வியும், பித்ருக்கள் தோஷ நிவாரண சங்கல்பமும் நடைபெற்றன.
இரவு உற்சவா் முத்துமாரியம்மன் விசேஷ நா்த்தன நவதுா்கா அலங்காரத்தில் கோயில் வளாகத்தில் உலா வந்தாா். பின்னா், அம்மன் ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. கோயில் அறக்கட்டளைச் செயலாளர் ஆறு.இலட்சுமண சுவாமிகள் பூஜைகளை நடத்தினாா்.
