திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 34 உள்ளாட்சிப் பதவிகளுக்கு நாளை  அக்.9 தோ்தல் நடைபெறவிருக்கிறது.

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் 9 மாவட்டங்கள் தவிா்த்து, பிற மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவிகளுக்கு நாளை  இடைத் தோ்தல் நடைபெறவிருக்கிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 3 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகள், 6 ஊராட்சித் தலைவா் பதவிகள், 25 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகள் என மொத்தம் 34 பதவிகளுக்கு நாளை அக் 9  தோ்தல் நடைபெறுகிறது.

தோ்தல் நடைபெறும் பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த வேட்பாளா்கள் நேற்று மாலையுடன் தங்களது பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

77 வாக்குப் பதிவு மையங்கள்: தோ்தலுக்காக மாவட்டம் முழுவதும் 77 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு வாக்குப் பதிவு மையத்துக்கு 4 அலுவலா்கள் என 308 போ் தோ்தல் பணியில் ஈடுபடுகின்றனா்.

இந்தத் தோ்தலில் 31,555 வாக்காளா்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை வருகிற 12-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது