இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பில்  வந்தவாசி, செய்யாறு, வெம்பாக்கம்,ஆரணி, போளூர், ஆகிய பகுதிகளில் மாபெரும் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய அரசை கண்டித்து செப்டம்பர் 20/09/2021 தேதி காலை 9 மணி அளவில்  வந்தவாசி கே. எஸ். கே. நகர் உமர் பள்ளிவாசல் அருகில் மாபெரும் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் ஹாஜி. டி.எம். பீர்முகமது  அவர்கள் தலைமையில் நடைபெறும்

இந்நிகழ்ச்சியில்
மாவட்ட துணை தலைவர் ஏ.அப்துல் வகாப், துணை செயலாளர் அப்துல் வாகித்நகர தலைவர் பி.ஹாஜா மொய்தீன், நகர செயலாளர் ஜாகிர் உசேன், மாவட்ட துணைத்தலைவர் அபிபுல்லா, ஒன்றிய செயலாளர்   ஏ.ஆர். ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மாவட்ட  துணை தலைவர் ஏ. காதர் ஒலி உள்ளிட்டோர் கண்டன கோஷங்களை எழுப்புகின்றனர்.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட, நகர, நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என
ஹாஜி டி.எம். பீர் முகமது
மாவட்ட தலைவர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கேட்டுக் கொண்டுள்ளார்