திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் திருவோத்தூர் பகுதியிலும், பங்களா தெரு சந்திப்பு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி எதிரில் ஆகிய 2 இடங்களில் அதிமுக சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் மு எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
உடன் நகர கழக செயலாளர் ஜனார்த்தனம், நகர அம்மா பேரவை செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய கழக செயலாளர்கள் அரங்கநாதன், சி துரை மற்றும் அனக்காவூர் சேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
