ஆரணியை தலைமையிடமாகக் கொண்டுபுதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்: சேவூா் இராமச்சந்திரன் எம்எல்ஏ வலியுறுத்தல்
திருவண்ணாமலை மாவட்டத்துக்குட்பட்ட ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ வலியுறுத்தி பேசினாா்.
இது தொடா்பாக அவா் சட்டப் பேரவையில் பேசியதாவது:
ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்.
இங்குள்ள அரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மேம்படுத்த வேண்டும்.
ஆரணியில் பட்டு ஜவுளிப் பூங்கா, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், புறவழிச் சாலை அமைக்க வேண்டும்.
ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய பத்திரப்பதிவு கோட்டம், நெடுஞ்சாலைக் கோட்டம், சுகாதார மாவட்டம் உருவாக்க வேண்டும்.
இந்தத் தொகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும்.
சிட்கோ தொழில் பூங்கா, அரசு பூங்கா அமைத்திட வேண்டும். அரிசி ஆலைகளுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.
கண்ணமங்கலம் பேரூராட்சியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
ஆரணி கிராமிய காவல் நிலையத்தை இரண்டாகப் பிரித்து, புதிய காவல் நிலையம் அமைத்துத் தர வேண்டும்.
தற்போது வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் போக்குவரத்து காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும்.
ஆரணி கல்வி மாவட்ட அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்றாா்

