வந்தவாசி கற்க கசடற கல்வி சேவைகள் அமைப்பு சார்பில் முப்பெரும் விழா
வந்தவாசி கற்க கசடற கல்விச் சேவைகள்
அமைப்பு சார்பில் முப்பெரும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு மலர் சாதிக் தலைமை தாங்கினார்.
நிறுவனர் இரா. பாஸ்கரன் வரவேற்றார்.
ஆலோசகர்கள் பா. சீனிவாசன், எம்.பி.வெங்கடேசன், மு. பிரபாகரன் சட்ட ஆலோசகர் வினோத் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் தரணி வேந்தன், செய்யாறு கல்வி மாவட்ட அலுவலர் பு. நடராஜன், வந்தவாசி சரக காவல் துணைக் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா, முன்னாள் மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.குமார் ஆகியோர் பங்கேற்றனர்
பின்னர் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கு பதக்கங்கள், சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் டாக்டர் ஆனந்தன், பரிதா பானு, நளினா, ராகுல், வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் குழு செயலாளர் பி. மனோஜ் குமார் நன்றி கூறினார்
