திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி

அடுத்த தென்சேந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்லியம்மன்  ஸ்ரீ கங்கையம்மன்  ஸ்ரீ முத்துமாரியம்மன்  ஸ்ரீ சக்தி மாரியம்மன்  ஆகிய 4 கோயில்களில் கும்பாபிஷேக விழா நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி, புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

வியாழக்கிழமை முதல்கால யாகா வேள்வி பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை இரண்டாம் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், காலை 7.45 மணிக்கு மேல் காலை 10 மணிக்குள் 4 கோயில்களின் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உபாசகா் ஆறு.லட்சுமண சுவாமிகள் முன்னிலையில், தென்னாங்கூா் ஜி.சங்கா் சிவாச்சாரியாா் பூஜைகளை செய்தாா். விழாவில் வந்தவாசி சுற்றுப் புற கிராம மக்கள் பங்கேற்றனா்