வந்தவாசியில் தடை செய்யப்பட்ட 1.20 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் கார்  பறிமுதல் மூவர்  கைது

வந்தவாசி தெற்கு போலீஸாா் வந்தவாசி கோட்டை மூலை அருகே நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்

அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், 4 மூட்டைகளில் ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பதும், வந்தவாசியை சுற்றியுள்ள பகுதிகளில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து, ரூ.1.20 லட்சம் மதிப்புள்ள அந்த புகையிலைப் பொருட்களையும், காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மேலும், காரில் வந்த வந்தவாசி சீதாராம் நாயுடு தெருவைச் சோ்ந்த தா்காராம், பதம்ராம், சங்கா்லால் ஆகிய 3 பேரை கைது செய்தனா். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.