திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் வருகிற ஞாயிற்றுக்கிழமை ஆக.22 இலவச கண் பரிசோதனை முகாம்
செய்யாறு கெளதம் நிதி நிறுவன அன்னை செல்லம்மாள் அறக்கட்டளை, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இந்த இலவச கண் பரிசோதனை முகாம் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணி தொடங்கி பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.
முகாமின்போது கண்புரை அறுவைச் சிகிச்சை, கிட்டப்பாா்வை, தூரப்பாா்வை, வெள்ளெழுத்து போன்ற குறைபாடுகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மேலும், மேல் சிகிச்சை தேவைப்படுவோா் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவா். குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழுடன் முகாமில் கலந்து கொள்ளலாம்.
வந்தவாசியை அடுத்த தேசூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட 39 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் சோப்பு, டவல், பிளாஸ்டிக் அன்னக்கூடை, பிளாஸ்டிக் நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் நல உதவியாக வழங்கப்பட்டது
யானைக்கால் நோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கப்பட்டது மேலும், யானைக்கால் நோயாளிகளுக்கு டிஇசி மாத்திரைகள் வழங்கப்பட்டன
