வந்தவாசி கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் முத்தமிழ் அறிஞர் நினைவுநாள் கவியரங்கம் நிகழ்ச்சி கலைஞர் தாசன் தலைமையில் நடைபெற்றது

இதில் கலந்துகொண்ட திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம் எஸ் தரணிவேந்தன், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் ஆகியவற்றை  பட்டியலிட்டு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மஸ்கட் பன்னாட்டு திமுக செயலாளர் மஸ்கட் சிவக்குமார் ஏற்பாட்டில் ஆதரவற்ற குடும்பத்தினருக்கு உணவுப் பொருட்களும், ஏழ்மை நிறைந்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புக்கு தேவையான ஸ்மார்ட்போன்களை வழங்கினார்.

வந்தவாசி நகர திமுக செயலாளர் எச் ஜலால், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ஏழுமலை, மாவட்ட பிரதிநிதி சி.பி.பாபு, முன்னாள் நகர செயலாளர் எஸ்.அன்சாரி, முன்னிலை வகித்தனர்

சிறப்பு விருந்தினர்களாக கற்க கசடற தமிழ்ச்சங்க நிர்வாகிகள் மலர் சாதிக், பாஸ்கரன், இந்தியன் டிவி வந்தை பிரேம் கலந்து கொண்டனர்

கலைஞர் தமிழ் சங்க நிர்வாகிகள் கலைஞர்தாசன்  தலைமை ஏற்று நடத்திய நிகழ்ச்சியை சிவா தொகுத்து வழங்கினார்

நகர அவைத்தலைவர் ஏ.நவாப்,  மற்றும் கழகத்தினர் தமிழ் உணர்வாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.