தமிழகத்தில் 1,969 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 64 ஆயிரத்து 712 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 1,127 ஆண்கள், 842 பெண்கள் என மொத்தம் 1,969 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக கோவையில் 223 பேரும், ஈரோட்டில் 198 பேரும், சென்னையில் 194 பேரும், செங்கல்பட்டில் 115 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறைந்தபட்சமாக திண்டுக்கலில் 8 பேரும், பெரம்பலூரில் 6 பேரும், தென்காசியில் 5 பேரும், ராமநாதபுரத்தில் 2 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்குட்பட்ட 94 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 291 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 76 லட்சத்து 59 ஆயிரத்து 29 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அதில் 15 லட்சத்து 3 ஆயிரத்து 216 ஆண்களும், 10 லட்சத்து 70 ஆயிரத்து 98 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 25 லட்சத்து 73 ஆயிரத்து 352 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனியார் மருத்துவமனையில் 7 பேரும் என 29 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 34 ஆயிரத்து 289 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,839 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 25 லட்சத்து 18 ஆயிரத்து 777 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 20 ஆயிரத்து 286 பேர் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 39 ஆயிரத்து 90 ஆக்சிஜன் படுக்கைகள், 24 ஆயிரத்து 155 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 449 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 70 ஆயிரத்து 694 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
