பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: சைக்கிள் ஓட்டிய ராகுல் காந்தி

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதை எதிர்த்து, நாடாளுமன்றத்துக்கு 17 எம்.பி.களுடன் ராகுல்காந்தி எம்பி சைக்கிள் ஓட்டி வந்துள்ளார்.
கொரோனாவுக்கு அடுத்தப்படியாக நாட்டின் தலையாய பிரச்சினையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு உருவெடுத்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வருவாய் இன்றி தவித்து வரும் வேளையிலும், பெட்ரோல், டீசல் இந்தளவிற்கு ஏன் விலை ஏறிக்கொண்டிருக்கிறது என தெரியாமல், மக்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர். இதனால் பாரதீய ஜனதா அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
அதேபோல விலையேற்றத்துக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொந்தளித்து போராட்டம் நடத்தும் போது, சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் விலையேற்றம் செய்வதாகவும், டிமாண்ட் செய்வதாகவும் பாரதீய ஜனதா அரசு விளக்கம் கூறுகிறது.
ஆனால், அதற்கு விதிக்கப்படும் வரி, கூடுதல் வரிகள் குறித்து மட்டும் வாய் திறப்பதில்லை.
ராகுல் காந்தி சைக்கிள் பேரணி
இந்நிலையில், எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து, சட்டப்பேரவை உறுப்பினர்களும் மக்களவை உறுப்பினர்களும் சட்டங்கள் இயற்றும் சட்டப் பேரவைகளுக்கும் நாடாளுமன்றத்திற்கும் மாட்டு வண்டி, சைக்கிள் போன்ற வாகனங்களில் வந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.
அந்த வகையில் இன்று நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட 17 எதிர்க்கட்சி எம்பிக்கள் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டிக்கும் விதமாக, சைக்கிளில் பேரணி வந்தனர்.
கடந்த வாரம் ராகுல் காந்தி வேளாண் சட்டங்களை எதிர்க்கும் வகையில் டிராக்டருடன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்து குறிப்பிடத்தக்கது.
