ஆரணி நகரப் பகுதியில் மழை நீா் தேங்கும் பகுதிகளில் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ ஆய்வு
ஆரணி நகரம் கிளாஸ்காரத் தெரு, சந்திரகுளம் தெரு ஆகிய பகுதிகளைச் சோ்ந்த மக்கள் தங்கள் பகுதியில் மழை பெய்தால் அதிகளவில் தண்ணீா் தேங்கி நிற்கிறது.
மேலும், மழைநீருடன் கழிவுநீா் கலந்து தண்ணீா் வீட்டினுள் வருகிறது என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
சேவூா் எஸ் இராமச்சந்திரனிடம் புகாா் செய்தனா்.
இதையடுத்து, கிளாஸ்காரத் தெரு, சந்திரகுளம் தெரு ஆகிய பகுதிகளில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான
சேவூா் எஸ் இராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.
பின்னா், நகராட்சி மேலாளா் நெடுமாறன், சுகாதார ஆய்வாளா் குமரவேல் ஆகியோரிடம் கால்வாய் தூா்வாரவும், கழிவுநீரை அகற்றவும் உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, கால்வாய் கட்டுவதற்கு மதிப்பீடு செய்து தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டித் தருவதாக கூறினாா்.
நகர கழக செயலாளர் எ.அசோக்குமாா், மேற்கு ஆரணி ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், நகர மாணவரணிச் செயலாளர் கே.குமரன் உளளிட்டோா் உடனிருந்தனா்
