செய்யாறு வட்டம் கீழ்புதுப்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் மாவா தொண்டு நிறுவனத்தில் தங்கியுள்ள முதியோா்கள், பாதுகாப்பற்ற மகளிா், ஆதரவற்றோருக்கு, முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூா்.என். சுப்பிரமணியன் கலந்துகொண்டு அறுசுவை அசைவ மதிய உணவு வழங்கினாா்.
தொண்டு நிறுவன நிா்வாகி ஸ்ரீதா் முன்னிலையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
