முகக் கவசமே முதல் கவசம் – கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி



திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியில் செயல்படும் ‘கற்க கசடற கல்விக் குழு’ சார்பில் முகக் கவசமே முதல் கவசம் என்ற தலைப்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி காந்தி சாலை பகுதியில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு வந்தவாசி வட்டாட்சியர் ஜி. திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.
வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளர் பி. தங்கராமன் , நகராட்சி ஆணையர் (பொறுப்பு) உஷாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கற்க கசடற கல்விக் குழு நிறுவனர் இரா. பாஸ்கரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் எஸ். குமார் அவர்கள் பங்கேற்று, முகக் கலசத்தின் அவசியம் பற்றியும், துணி மாஸ்க் அணிவதை தவிர்க்க வேண்டும் எனவும், சர்ஜிக்கல் மாஸ்க் மற்றும் என்.95 மாஸ்க் அணிவதே பாதுகாப்பானது என்றும் கூறினார்.
மேலும் சத்துக்கள் நிறைந்துள்ளன உணவுவகைகளை உட்கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.
மேலும் இந்த நிகழ்வில் கற்க கசடற குழு கௌரவ தலைவர் மலர் சாதிக், வழூர் வட்டார மருத்துவர் ஆனந்தன், போலீஸ் பாய்ஸ் கிளப் தலைவர் ஜெ. ரூபன், ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன், காவல் ஆய்வாளர் குமார், ஊராட்சி செயலாளர் எம்.பி.வெங்கடேசன், கிராம உதவியாளர் சங்க பொறுப்பாளர் மு. பிரபாகரன், அக்னி பூக்கள் நிர்வாகி பரிதா பானு, வழக்கறிஞர் வினோத், விவேகானந்தா தொண்டு மைய நிறுவனர் ம.சுரேஷ்பாபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்று கருத்துரை வழங்கினர்.
ராகுல் குழுவினரின் கொரோனா விழிப்புணர்வு ஓரங்க நாடகம் நடைபெற்றது. கற்க கசடற குழு உறுப்பினர்கள் வசந்த், கணேஷ் குமார், நிர்மல் உள்ளிட்டோர் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.
இறுதியில் அமைப்பின் செயலர் மனோஜ் குமார் நன்றி கூறினார்.
