கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
அந்த வகையில் வருகிற 12-ந்தேதி திருவாரூர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன் முறையாக மு.க.ஸ்டாலின் திருவாரூர் செல்கிறார்.
