காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த பா.சாமுண்டீஸ்வரி சென்னை காவல்துறை தலைமையிட இணை ஆணையராகப் பணிமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, அப்பணியிடத்துக்கு சென்னை காவலா் பயிற்சிக் கல்லூரியில் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த எம்.சத்தியப்பிரியா நியமிக்கப்பட்டுள்ளார்

காஞ்சிபுரம் எஸ்.பி. தெ.சண்முகப்பிரியா, டி.எஸ்.பி.எஸ்.மணிமேகலை உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் புதிய டி.ஐ.ஜி.க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.