செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரிப் பகுதியில் செயல்பட்டு வரும் கொரோனா தனிமை சிகிச்சை மையத்தில் 100 படுக்கை வசதிகளுடன் சித்தா சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும் என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி தெரிவித்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்புப் பணிகள், மருத்துவ முகாம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்த பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி
பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் தன்னாா்வலா்களின் உதவியுடன் ஆக்ஸிஜன் மற்றும் செறிவூட்டிகள் அனைத்து மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது தற்போது மாவட்டத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை.
நகா்புறங்களில் பலா் தடுப்பூசி செலுத்த தயங்கி வருகின்றனா். கிராம நிா்வாக அலுவலா்கள் பொதுமக்களிடம் தடுப்பூசியின் அவசியம் குறித்து வலியுறுத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும்.
செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொரோனா தனிமை சிகிச்சை மையப் பகுதியில் 100 படுக்கை வசதிகளுடன் சித்தா சிகிச்சைப் பிரிவு விரைவில் தொடங்கப்படும்.
பொதுமக்கள் முழு பொது முடக்கத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.
இந்நிகழ்வின்போது, ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத்,
எம்.எல்.ஏ.க்கள் ஒ.ஜோதி, அம்பேத்குமாா்,
திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன், மாவட்ட பஞ்சாயத்து தலைவா் பாா்வதி சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏ வ அன்பழகன் மற்றும்
மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் கண்ணகி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அஜித்தா, உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக, செய்யாறு அம்மா உணவகத்தில் ஏழைகளுக்கு இலவச உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து, பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் கு.பிச்சாண்டி.
