உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14.45 கோடியாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16.54 கோடியை தாண்டி உள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 165,540,600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 144,564,661பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34 லட்சத்து 31 ஆயிரத்து 121 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 17,544,818 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சை பெறுபவர்களில் 1,00,113 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு – 33,802,324,  உயிரிழப்பு – 601,949 , குணமடைந்தோர் –  27,299,180
இந்தியா   – பாதிப்பு -25,771,405,  உயிரிழப்பு – 287,156,  குணமடைந்தோர் –  22,348,683
பிரேசில்  –  பாதிப்பு – 15,815,191,  உயிரிழப்பு – 441,864,  குணமடைந்தோர் –  14,330,118
பிரான்ஸ் –  பாதிப்பு –  5,917,397,  உயிரிழப்பு –  108,181, குணமடைந்தோர் –   5,188,782
துருக்கி  –  பாதிப்பு – 5,151,038,  உயிரிழப்பு –    45,419, குணமடைந்தோர் –   4,980,516

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,874 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 2,76,110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,57,72,440 ஆக உயர்ந்தது.

* புதிதாக 3,874 பேர் உயிரிழந்துள்ளனர்.

* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,87,122 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,69,077 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  2,23,55,440 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 31,29,878 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் சதவிகிதம் 86.74% ஆக அதிகரித்துள்ளது.

* கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.11% ஆக அதிகரித்துள்ளது.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 12.14% ஆக அதிகரித்துள்ளது.

* இதன் மூலம், நாட்டின் இதுவரை 18,70,09,792  பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.