வந்தவாசி நகராட்சி சாா்பில் வியாபாரிகள், பொதுமக்களுக்கான கொரோனா பரிசோதனை சிறப்பு முகாம்நடைபெற்றது.

வந்தவாசி தேரடியில் நடைபெற்ற இந்த முகாமை நகராட்சி ஆணையா் (பொறுப்பு) டி.உஷாராணி தொடங்கிவைத்தாா்

நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம், இளநிலை உதவியாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், சுகாதாரத் துறையைச் சோ்ந்த மருத்துவக் குழுவினா் வியாபாரிகள், பொதுமக்களிடமிருந்து சளி மாதிரிகளை சேகரித்தனா். முகாமில் மொத்தம் 36 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது